இந்திய மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களில் முதன்மையானவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என அமைச்சர் சக்கரபாணி புகழாரம்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பழனி சுகாதார மாவட்டம் தொப்பம்பட்டி வட்டாரத்தில் உள்ள புஷ்பத்தூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இதய நோய் எலும்பு நோய் தோல் நோய் உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி இந்திய மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களில் முதன்மையாகத் திகழ்பவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என புகழுரைத்தார். தொப்பம்பட்டி பகுதியில் உள்ள முப்பத்தைந்து ஊராட்சிகளில் விரைவில் அரசின் சார்பில் 6 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளதாகவும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பச்சையாறு அணை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறிய அமைச்சர் பழனி அரசு மருத்துவமனை விரைவில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார். பின்னர் மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் இலவச வீட்டு மனை பட்டா குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மாவட்ட ஆட்சியர் விசாகன் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் பொன்ராஜ் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்