திமுக எம்.எல்.ஏ-வா? மதிமுக வைகோ-வா?
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ விற்கும் வைகோவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக எம்எல்ஏ வான ராஜா வை என் சொந்த ஊரான கலிங்கப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வராவிட்டால் உனது அரசியல் வாழ்வையே இல்லாமல் செய்து விடுவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிரட்டியுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகாலமாக அதிமுகவின் வசமிருந்த சங்கரன்கோவில் சட்டசபை
தற்பொழுது திமுகவின் வசம் வந்துள்ளது. அதை தக்க வைத்துக் கொள்ள திமுக எம்.எல்.ஏ ராஜா அந்த தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
குருவிகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த சாய மலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றினால் அதை சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர் என்று திமுக எம்.எல்.ஏ ராஜா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் மனு அளித்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ ராஜாவின் கோரிக்கையை ஏற்று சாய மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு வைகோ கூறியது அதிகாரிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்.எல்.ஏ ராஜா சாய மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் எம்.எல்.ஏ ராஜா மீது வைகோ கடும் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏ ராஜாவை சந்தித்த வைகோ எனக்கு நீ அரசியல் சொல்லி தருகிறாயா?, என்னை எதிர்த்து அரசியல் செய்கிறாயா?, உன் அரசியல் வாழ்வை தொலைத்து விடுவேன்!!! என்றும் மிரட்டியுள்ளார்.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 15 லட்சம் செலவழித்து உள்ளதாகவும், எனவே கலிங்கப்பட்டிக்கு தான் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வந்தாகவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் திமுக எம்.எல்.ஏ ராஜா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில் சாய மலையிலுள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் சுற்றுப் பயணத்தின் பொழுது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாதவாறு இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆளும் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் : மகாராணி, தென்காசி
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திமுக #மதிமுக #வைகோ #சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்எம்எல்ஏ #எம்எல்ஏராஜா #DMK #Vaiko #Sankarankovil #SankarankovilMLA #RajaMLA_Sankarankovil