க்ரைம்செய்திகள்

மாணவி தற்கொலை விவகாரம், மேலும் ஒருவர் கைது

கோவை மாணவி தற்கொலை விவகாரம், மேலும் ஒருவர் போக்சோவில் கைது

கோவை 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கு, தலைமறைவாக இருந்த சின்மயா வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியையை தனிப்படை போலீசாரால் பெங்களூரில் கைது.

கோயம்பத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை மாற்றிய மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி தற்கக்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை கைது உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆசிரியரின் தவறான போக்கு குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது குற்றம் சாட்டிய மாணவியின் பெற்றோர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ அமைப்பினர் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்தனர். தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தேடி வந்த நிலையில், அவர் பெங்களூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர். பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் இன்னும் சில மணிநேரங்களில் பெங்களூரில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உள்ளார்‌.

ஏற்கனவே, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளதால் இன்று மாணவியின் பெற்றோர் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

செய்திகள் : கார்த்திக், கோவை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button