அம்பேத்கருக்கு மலர் தூவி அஞ்சலி
பொள்ளாச்சியில் அண்ணல் அம்பேத்கருக்கு தி.மு.க. வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகம் முன்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர். வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, நகர செயலாளர் வடுகை பழனிச்சாமி, ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை அமைப்பாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட அமைப்பாளர் மாணிக்கராஜ், நகர துணைச் செயலாளர் நாச்சிமுத்து, நகர துணைத்தலைவர் கார்த்திகேயன்,ஒன்றிய செயலாளர் அய்யம்பாளையம் ராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.