அக்காமலையில் கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை
வால்பாறை அக்காமலையில் பெய்த கனமழையால்
கருமலை அருகே உள்ள தடுப்பணை நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் தடுப்பணை உள்ளது.
அக்காமலை புல்வெளி பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை பகுதி கடல் போல் காட்சி அளித்தது.
இந்த தடுப்பணையில் இருந்து கருமலை, பச்சமலை, நடுமலை சாலைகளின் வழியாக வால்பாறை பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு சுமார் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக தடுப்பணை பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
செய்தியாளர் கருப்பசாமி, வால்பாறை.