
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கால் முறிந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளஞ்சியம்மாள் என்பவரை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கி, பூதாமூரில் உள்ள அவரின் இடிந்த வீட்டை பார்வையிட்டார்.
