முப்படைத் தலைமை தளபதிக்கு
பொள்ளாச்சி காங்கிரசார் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு பொள்ளாச்சியில் காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் ராணுவ முப்படைத் தலைமை தளபதி ஜெனரல். பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் போட்டோவுக்கு காங்கிரஸார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி, மாவட்ட துணைத் தலைவர் சிற்பி ஜெகதீசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன் ராஜ், லூயிஸ், நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள், கருணைமகாலிங்கம், ஜவஹர் பாண்டியன், தங்கவேல், நகர துணைத் தலைவர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.