மாரிதாஸ் கைதுக்கு கண்டனம்
வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
யு டியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்து பொள்ளாச்சியில் பா.ஜ.க. வினர் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக யு டியூபர் மாரிதாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து பா.ஜ.க. வினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெங்கடேசா காலனியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன பதாகைகளையும் கைகளில் வைத்திருந்தனர்.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் குமரேசன், துரை, சிவகுமார், ஆனந்த், நகர தலைவர் மணிகண்டன், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.