10 ரூபாய்க்கு வேட்டி
ரூ. 50 க்கு சேலை
பொள்ளாச்சியில் 10 ரூபாய்க்கு வேட்டியும், 50 ரூபாய்க்கு சேலையும் விற்பனை செய்த துணிக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேசன் அருகில் கமலிகா சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. கடை தொடங்கி 100வது நாளை கொண்டாடும் வகையிலும், கடையின் உரிமையாளர் சரவணகுமார் தனது மகன் பெயரில் புதிதாக தயாரிக்கப்படும் யுவராஜ் வேட்டிகளை அறிமுகப்படுத்தும் வகையிலும் நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன்படி இன்று ஒரு நாள் மட்டும் வேட்டி 10 ரூபாய்க்கும், சேலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு செய்தார். இந்த தகவல் பரவியதும் இன்று காலை முதலே கடைக்கு முன்பாக ஆண்களும், பெண்களும் குவியத் தொடங்கினர்.
துணிக்கடையின் உரிமையாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவராஜ் வேட்டிகளை லயன்ஸ் சங்க நிர்வாகி ராஜசேகர் அறிமுகம் செய்து வைத்தார். ரூ. 10க்கு வேட்டி விற்பனையை கே.எம். சாரீஸ் உரிமையாளர் கமருதீன் தொடங்கி வைக்க, முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் பெற்றுக்கொண்டார்.