டிடிவி தினகரன் பிறந்தநாள்:
பழங்குடியினருக்கு அன்னதானம்
டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் அ.ம.மு.க. வினர் பழங்குடியினருக்கு அன்னதானம் வழங்கினர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா பொள்ளாச்சியில் கொண்டாடப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கே. சுகுமார் ஆலோசனைப்படி ஆர்.பொன்னாபுரம் ஊராட்சியில் உள்ள சத்யராஜ் காலனியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட இணைச்செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இலக்கிய அணி மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட மகளிரணிச் செயலாளர் சாந்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கணேசன், துணைத்தலைவர் சின்ன குட்டி, குமார், காளிமுத்து, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.