350 கிலோ கஞ்சா பறிமுதல்
தேனி வாலிபர் திருப்பூரில் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 350 கிலோ கஞ்சாவை திருப்பூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட கொங்கு நகர் அங்கேரிபாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். காரை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனை முழுமையாக பரிசோதித்தனர்.
அப்போது காருக்குள் கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசாரின் முறையான விசாரணையில் காரை ஓட்டி வந்த அந்த நபர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பால்பாண்டி (வயது 27) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்புடைய 350 கிலோ கஞ்சாவை தேனிக்கு கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.
கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா எந்த பகுதியில் இருந்து கடத்தி வரப்படுகிறது, இது யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது, பால்பாண்டி மீது ஏற்கனவே வேறு வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.