4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்:
பள்ளியில் போலீஸ் விசாரணை
திருப்பூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை.
திருப்பூர் அருகே உள்ள பூலுவப்பட்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் அப்பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.
இந்நிலையில் அச்சிறுமியை அப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது. தகவல் பரவியதும் சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பள்ளியின் முன்பு திரண்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் பள்ளிக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.