கோவைக்கு தேவை
புறநகர் மின்சார ரயில்
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறநகர் மின்சார ரயில்
சேவையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை இந்திய தொழில் வர்த்தக சபை
நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்
நிகழ்ச்சி, அவிநாசியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி
கலந்துகொண்டு அமைப்பு நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இதில், கோவை இருகூரில் இருந்து
எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, பீளமேடு, வடகோவை, ரயில் நிலையம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் வழியாக மீண்டும் இருகூர் செல்லும் வழியில்
ரயில் பாதை இருப்பதால், கோவையில்
புறநகர் ரயில் சேவையைத் தொடங்க
வேண்டும். இதன் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்றனர்.
மேலும் கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான்,
விமான நிலையம் விரிவாக்கம், ஐ.டி. பார்க் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.