அரசு கேபிளுக்கு கூடுதல் கட்டணம்
சப்-கலெக்டரிடம் புகார்
பொள்ளாச்சியில் அரசு கேபிள் இணைப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சப்- கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதித்தமிழர் பேரவையின்
தலைமை செயற்குழு உறுப்பினர் கோபால் என்பவர் பொள்ளாச்சி சப்-கலெக்டர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், கோட்டாம்பட்டி பகுதியில் வசிக்கும் எனது வீட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (செட்டாப் பாக்ஸ்)
இணைப்பு பெற்றுள்ளேன். அரசு இலவசமாக வழங்கிய செட்டாப் பாக்சுக்கு உதயா கேபிள் நிர்வாகம் ரூ. 500 வாங்கிக் கொண்டுதான் எனக்கு வழங்கினார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் கட்டச்சொல்கிறார்கள். தொடர்ந்து என்னிடமும்,
இப்பகுதி மக்கள் பலரிடமும் மாதம்தோறும்
ரூ. 230 முதல் ரூ. 240 வரை கட்டணம் பெற்றுவருகின்றனர்.
குறித்த நேரத்தில் பணம் கட்டத்தவறினால் இணைப்பை துண்டித்துவிடுவோம் என மிரட்டுகிறார்கள். ஒரு மாதம் பணம்
கட்டமுடியவில்லை என்றால் அடுத்த மாத தொகையுடன் அபராதமாக ரூ. 50 அதிகமாக கட்டச்சொல்கிறார்கள். மாதம்தோறும் கட்டும்
பணத்திற்கு உரிய ரசீதும் கொடுப்பதில்லை.
ஆகவே உதயா கேபிள் டிவி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தையே செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் அரசு வழங்கிய இலவச செட்டப்பாக்ஸ்க்கு வழங்கிய ரூ. 500 பணத்தையும், இதுவரை அரசு நிர்ணயித்த கட்டணம் போக கூடுதலாக வசூலித்த மீதி பணத்தையும் திரும்ப பெற்றுத்தருமாறு
கேட்டுக்காள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.