அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல்:
விருப்ப மனு
பொள்ளாச்சியில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் தேர்தலுக்கு விருப்ப மனு பெறப்பட்டது.
அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர நிர்வாகிகளுக்கு போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சித் தலைமை
அறிவிக்கப்பட்டிருந்தது.
தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சேலம் பெத்த நாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மோகன் தலைமையில் விருப்பமனு பெறப்பட்டது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட கட்சியினர் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்தனர்.
மேற்கண்ட பொறுப்புகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருப்பின் நாளை தேர்தல் நடைபெறும் என்றும், போட்டியில்லாத பொறுப்புகளுக்கு ஒருமனதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.