மத்திய அரசை கண்டித்து ரயில் பயணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
பாலக்காடு கோட்ட மற்றும் மத்திய அரசை கண்டித்து கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களை புறக்கணிக்கும் விதமாக பாலக்காடு ரயில்வே கோட்டமும், மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும், கோவையிலிருந்து கிணத்துக்கடவு வழியாக ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த ராமேஸ்வரம், திண்டுக்கல், தூத்துக்குடி,
தென்காசி (குற்றாலம்) ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர், மதுரை (இண்டர்சிட்டி)
தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும், பொள்ளாச்சியிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு
சேரன் விரைவு ரயிலை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாலக்காடு ரயில்வே கோட்டம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றை கண்டித்தும்
கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கம்
மற்றும் பொது மக்கள் இணைந்து வெள்ளிக்கிழமை R.S. ரோடு தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.