சுரண்டையில் கிறிஸ்துமஸ் விழா
சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமசை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தலைமையில், சுரண்டையில் சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனி நாடார் அவர்கள் அலுவலகத்தில் வைத்து தென்காசி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பின்பு பழனி நாடார் அவர்கள் கேக் வெட்டி சிறப்பித்து அனைவருக்கும் கேக் வழங்கினார்.
இவர்களுடன் இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி, மாவட்ட அமைப்பு செயலாளர்கள் அகிலாண்டம், தெய்வேந்திரகுமார், S.முருகன், மேலப்பாவூர் ஒன்றிய சேர்மன் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் சல்மான் மைதீன் மற்றும் வட்டார நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.