ரேக்ளாவில் சீறிய காளைகள்
பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் பார்ப்போரை பரவசப்படுத்தியது.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்தூர் மணல்மேடு அருகே ஒன்றிய பொறுப்பாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் சந்திரமோகன், ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், மருதமுத்து, கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
300 மீட்டர் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட 6 பல் காளைகள் பங்குபெற்றன. அசுர வேகத்தில் காளைகள் சீறிப் பாய்ந்தது பார்ப்போரை பரவசப்படுத்தியது. 2, 4 பல் காளைகளுக்கு 200 மீட்டர் பிரிவிலான பந்தயம் நாளை நடைபெறுகிறது.