செயல் வீரர் ஆலோசனை கூட்டம்
திருப்பூரில் அ.ம.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . ராக்கியபாளையம் பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நகராட்சி கழக செயலாளர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.
இதில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத்தலைவர் குணசேகரன், அம்மா பேரவை செயலாளர் செல்வராஜ், வார்டு செயலாளர்கள் செந்தில்குமார், முருகேஷ், ரகுராமன்,
தட்சணாமூர்த்தி, விக்ரமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.