பல் மருத்துவ சங்க நிர்வாகிகள் தேர்வு
இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொள்ளாச்சி – உடுமலை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொள்ளாச்சி – உடுமலை கிளையின் தலைவராக ஏ.பி.ஆர். பல் மருத்துவமனை மருத்துவர் ஏ.பி. செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி இந்திய பல் மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் உமாசங்கர் மற்றும் மாநிலச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளான செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பிரவினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.