பிரியங்கா ராகுல் காந்தி பேரவையினர் – நலத்திட்ட உதவிகள்
திருப்பூரில் பிரியங்கா ராகுல் காந்தி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பூரில் அகில இந்திய பிரியங்கா ராகுல் காந்தி பேரவை சார்பில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் ரத்த தானம், கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றன.
பேரவையின் தேசியத் தலைவர் விஜய் குப்தா, மாநில தலைவர் ஆர். ஆர். முத்தையன், மாநில பொதுச்செயலாளர் வலம்புரி (எ) சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கமிட்டி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து ஏழை எளிய மக்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.