தியாகராஜர் ஆராதனை விழா
திருப்பூரில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் மற்றும் சங்கீத பிதாமகர் ஸ்ரீ புரந்தரதாசர் ஆராதனை விழா நடைபெறது.
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் ஏ.வி. என்.ஆர்.எஸ். கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் பாரதி ஆகியவை இணைந்து 7ம் ஆண்டு
சத்குரு ஸ்ரீ தியாகராஜர் மற்றும் சங்கீத பிதாமகர் ஸ்ரீ புரந்தரதாசர்
ஆராதனை விழாவினை நடத்தின.
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற
இந்த மங்கள வாத்தியம், நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம், வீணை, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் போன்ற இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கர்நாடக இசைப் பாடகர் தியாகராஜனின் சிறப்பு இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
இதில் சங்கீத இசைக்கலைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.