சுவர்களில் வர்ணம், மனதில் கறை: காமுகன் கைது
பொள்ளாச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். திருமணமான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என மனநிலை பாதிக்கப்பட்ட அப்பெண்ணை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அப்பெண் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொள்ளாச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து
போலீசார் நடத்திய விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் பெயிண்டர் பாலசுப்பிரமணியம் என்பது உறுதியானது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.