பொள்ளாச்சி கல்லூரியில்
தொழில்முறை படிப்பு துவக்கம்
பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சி.எம்.ஏ. எனும் தொழில்முறை படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காஸ்ட் அன்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட் (சி.எம்.ஏ.) என்கிற தொழில் முறைப்படிப்பின் துவக்க விழா நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் செயலர் முனைவர் அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வர் முனைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர்
கவிதா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கோவை காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மதன கோபால், பொருளாளர் சூர்ய பிரகாஸ், மாஸ்டர்ஸ் புரொபஷனல் அகாடமியின் நிறுவனர் முனைவர் கண்ணன்
நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு இப்புதிய படிப்பின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி சிறப்புரையாற்றினர்.
வணிகம் மற்றும் தொழில்முறை கணக்கியல் மூன்றாமாண்டு மாணவி சிவரஞ்சனி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.