வங்கதேசத்தினர் 23 பேர் கைது
திருப்பூரில் போலி ஆவணம் மூலம் தங்கியிருந்ததாக நடப்பாண்டில் 23 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருப்பூரில் கிரிப்டோகரன்சி, பிட்காயின் முதலீடு குறித்து சமூக வலைதளங்களில் அதிக லாபம் பெறலாம் என்று வலம் வரும் செய்திகளைக் கண்டு பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டில் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள எட்டு காவல் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டதாக 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 56வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 61 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகரத்தில் 18 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 70 கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, 44 வழிப்பறி சம்பவங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக போலியான ஆவணங்கள் மூலம் தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 23 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்