மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள்
பொள்ளாச்சியில் நடைபெற்ற பந்தயத்தில் மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் பைக் பந்தயம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் நகர இளைஞரணி ஆகியன இணைந்து தென்னிந்திய அளவில் நடத்திய இந்த பைக் பந்தயத்தில் கோவை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு இடங்களைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வீரர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டி மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டியது பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தி.மு.க. தெற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வக்கீல் அதிபதி, வக்கீல் சக்திவேல், மீனவரணி நிர்வாகி கோ.சி. மணி, செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மணிமாறன், பைக் பாபு ஆகியோர் செய்திருந்தனர்
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.