கட்டிட தொழிலாளர் சங்க கோரிக்கை மாநாடு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டிட தொழிலாளர் சங்க கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் ராஜன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றினர். இதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பினை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், கட்டுமான, இ.எஸ்.ஐ. வசதி வழங்க வேண்டும், வீடில்லா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், மேசன், மம்பட்டியாள், சித்தாள், சென்ட்ரிங், பிளம்பர், எலக்ட்ரிசீயன், கார்பெண்டர் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயலாளர் விசாகன், விருதுநகர் மாவட்ட செயலாளர் வீரபாலன், மாநிலக்குழு உறுப்பினர் அப்பாஸ், தமிழர் பண்பாட்டு பேரவை வழக்கறிஞர் சாதிக் பாஷா, குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, உடுமலை நகர செயலாளர் தெய்வக்குமாார், தலைவர் நாச்சிமுத்து, நகரத் தலைவர் முருகேஷ், ஆர்.வேலூர்மகளிரணி நிர்வாகிகள் வைதேகி, ரேவதி நாகமணி, ஈஸ்வரி, அம்சவேணி,
ராஜேஸ்வரி சாந்தாமணி மற்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும்,
கட்டுமான கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர் கண்ணன், உடுமலை.