வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்ட
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாரப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிட்டிசன் ஈஸ்வரன் அறிவுறுத்தலின் படி 19வது வார்டு செயலாளர் காட்டன் பி. சக்திவேல் தலைமையில் திரளானவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சில் பொதுக்குழு உறுப்பினர் உத்திராபதி, மாவட்ட அவைத்தலைவர் பால்சாமி, அவிநாசி தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், துணைச் செயலாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.