ஜார்கண்ட் மாநில பெண் தற்கொலை
ஜார்கண்ட் மாநில பெண் வால்பாறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சப் – கலெக்டர் விசாரித்து வருகிறார்.
ஜார்கண்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் திலிப் கெர்வார். இவரது மனைவி ரீனாகுமாரி. கணவன், மனைவி இருவரும் வால்பாறை அருகே உள்ள காடம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் கூலிவேலைக்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்தவர்கள் கோழிக்கறி வாங்கி சமைத்து இரவு
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரீனாகுமாரி தனது கணவரிடம், சொந்த ஊருக்கு போகலாம் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் சில நாட்கள்
வேலை செய்து பணம் சேர்ந்த பின்னர் போகலாம் என்று கூறியுள்ளார்.
இதில் மன வருத்ததில் இருந்த ரீனாகுமாரி
கனவர் வெளியில் சென்ற நேரம் பார்த்து
துப்பாட்டவால் விட்டத்தில் தூக்குபோட்டு
தற்கொலை செய்துகொண்டார்.
தேயிலைத் தோட்ட மேலாளர் கொடுத்த தகவலின் பேரில் காடம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரீனா குமாரியின் பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரீனா குமாரிக்க திருமணமாகி ஏழு வருடங்கள் பூர்த்தி ஆகாததால் சப் – கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.