1,400 கிராம் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
வால்பாறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விற்பனைக்காக வைத்திருந்த 1,400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், வால்பாறை சரக துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மேற்பார்வையில், வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் காமராஜர் நகர் அருகில் திவ்ய குமார் என்பவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்து, அவரிடமிருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் தாஸ் என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர்.
இருவர் மீதும் வால்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.