பொள்ளாச்சியில் 2.28 லட்சம் வாக்காளர்கள்
புதிய வாக்காளர் பட்டியலின்படி பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளில் 15 லட்சத்து 40 ஆயிரத்து 901 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 91 ஆயிரத்து 654 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 பேர் என மொத்தம் 31 லட்சத்து 33 ஆயிரத்து 128 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 22 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 79 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 43 பேர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.