திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சம் வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம் உட்பட 8 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 924 ஆண் வாக்காளர்கள், 12 லட்சத்து 12 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 309 பேர் என மொத்தம் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.