புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
பொள்ளாச்சியில் புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் சங்க நிர்வாகிகளான தலைவர் ஜானகிராமன், செயலாளர் செந்தில்குமார், சுனில் குமார், யுவராஜ், நந்து உள்ளிட்டோர், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர் தனபால், செயலாளர் முகமது அலி ஜின்னா, துணைத் தலைவர் கதிர், பொருளாளர் ரகுபதி, துணைச் செயலாளர் பூபாலன் ஆகியோரை பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வுடன், புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் மூத்த கலைஞர்களுக்கு மரியாதை, நழிவடைந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியனவும் நடைபெற்றன.