9 மயில்கள் சாவு
விஷம் வைக்கப்பட்டதா…?
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே 9 மயில்கள் இறப்புக்கு காரணம் விஷம் வைக்கப்பட்டதா என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி
வனச்சரகத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு வடபுதூர் கிராமத்தில் தனியார் தோட்டம் ஒன்றில் மயில்கள் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் பாரதி நகரில் உள்ள சென்னிமலை மகன் குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சோதனையிட்டனர். அங்கு 8 பெண் மயில்கள் மற்றும் 1 ஆண் மயில் என மொத்தம் 9 மயில்கள் இறந்து கிடந்தன.
இறந்த மயில்களை கால்நடை மருத்துவர் மூலம் உடற் கூறாய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இறந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வன உயிரின குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடற் கூறாய்வு முடிவுகள் கிடைத்த பிறகு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.