குறைந்தது நீர்வரத்து
குரங்கு அருவிக்கு செல்ல தடை
நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் குரங்கு அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வனத்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி
வனச்சரகத்தில் அமைந்துள்ள குரங்கு அருவியில் (கவியருவி) நீர்வரத்து
குறைந்துள்ளதால் 13ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்லவோ அல்லது
குளிக்கவோ காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக
அரசாணைப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கினை ஒட்டி வால்பாறை, வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும்
டாப்சிலிப்பிற்கு சுற்றுலா பயணிகள்
செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதர நாட்களில் வழக்கம் போல் பயணிகள்
சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்குவதற்கு முன்பதிவு செய்த வாகனங்களைத் தவிர இதர வாகனங்களை ஒரு நாளில் முதலில் வரும் 75 வாகனங்களை மட்டுமே சேத்துமடை வனச்சோதனைச் சாவடியில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில்
அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.