தேயிலைத் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை உலா
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட சிறுகுன்றா – காஞ்சமலை இடையிலான பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் தங்கள் செல்போனில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
ஒற்றை காட்டு யானை உலாவரும் தகவல் கிடைத்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகு அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர், கருப்பசாமி.
வால்பாறை.