எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிகவுண்டனூர் ஊராட்சி மேட்டுக்காட்டில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ன் 105வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆண்டிகவுண்டனூர் ஊராட்சித் தலைவர் மோகனவல்லி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான மகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். ன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
செய்தியாளர், கண்ணன். உடுமலை.