வனத்தில் இருள் நீங்குமா..?
மர்மங்கள் விலகுமா..?
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட. பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இந்த நான்கு வனச்சரகங்களில் கீழ்பூனாச்சி, சின்னார்பதி, நாகரூத்து, சர்க்கார்பதி, கோழிக்கமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி உட்பட பல்வேறு இடங்களில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
பல்வேறு இனங்களில் வனத்துறைக்கு வருமானம் வந்தாலும் மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளைக்கூட. செய்துகொடுகப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பரமசிவம் கூறியதாவது, வன உரிமைச் சட்டம் 2006ன் படி மேற்படி மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் கீழ்பூனாச்சி, சின்னார்பதி, கோழிக்கமுத்தி, எருமைப்பாறை ஆகிய. செட்டில்மென்ட்களில் இந்த குழுக்கள் தற்போதும் செயல்படுவதாக. காட்டிக்கொள்ளப்படுகின்றன.
இந்த குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்மலைவாழ் மக்களில் இருந்து முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். செயலாளராக வனச்சரகரும், பொருளாளராக. வனவரும் இருப்பர். ஆழியாறு குரங்கு அருவி, டாப்சிலிப் ஆகியவற்றிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம், வாகன. கட்டணம் மற்றும் கழிப்பிடம் செல்வதற்கான. கட்டணம் கூட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் பெயரில்தான் வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த வரவு செலவு கணக்குகள் எதுவும் மலைவாழ் மக்களின் பார்வைக்கோ, இந்த குழுக்களின் பார்வைக்கோ செல்வதில்லை.
இந்த நிதியின் பெரும் பகுதியை வனத்துறையினர் என்ன செய்கின்றனர் என்றே தெரிவதில்லை. வனக்குழுக்கள் சார்பில் 3 மாதத்திற்கு ஒரு முறை வனக்கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறுகூட்டம் எதுவும் நடத்தாமல், கூட்டம் நடந்தது போல் அப்பாவி மலைவாழ் மக்களிடம் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். ஆகவே இனி அதுபோல் வனத்துறையினர் தங்கள் விருப்பத்திற்கு செயல்படாமல் வனக்கிராம. சபை கூட்டங்களை முறையாக நடத்தி அவற்றை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அப்போதுதான் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.