710 பயனாளிகளுக்கு
தாலிக்கு தங்கம்
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 710 பயனாளிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 355 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். பொள்ளாச்சி கரப்பாடி பிரிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 355
பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 500 எல்.பி.எம்.
திறனுள்ள ரூ. 75 லட்சம் மதிப்பிலான பிராண வாயு கலன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற சாலை
மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும்,
ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி,
சமத்தூர், கோட்டூர், ஆனைமலை,
வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மொத்தம் ரூபாய் 10 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.