ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி
திண்டுக்கல்லில் ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தலில் வலுவூட்டல் பயிற்சி திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அமிர்தராஜ், பயிற்றுநர் ஜெயகிருஷ்ணன், சமூக ஆர்வலர் டாக்டர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது தலைமையாசிரியர் ஜெயந்தி பேசியதாவது: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தலில் புதிய பயிற்சிகளை நாம் அளிக்க உள்ளோம். இந்த உலகத்துக்கு வந்த ஒவ்வொரு குழந்தையும் முழுத் திறமையுடன் தான் வந்துள்ளது. அந்த திறமையை வெளிக்கொண்டு வருவதுதான் ஆசிரியர் பணி. ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகளின் திறமைகளை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி கற்றல் கற்பித்தல் பணிகளை நினைவில் நிற்கும் வகையில் அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நாம் கற்பிக்க வேண்டும். என்றார்.
செய்தியாளர் ரியாஸ்,
திண்டுக்கல்.