சிறுத்தை தாக்கியதில் சிறுவனுக்கு காயம்
வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் 2வது டிவிசனில் வசித்து வருபவர் சிறுவன் தீபக். 11 வயதான இச்சிறுவன் எஸ்டேட் குடியிருப்பு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கிது. இதில் சிறுவனின் இடது தோள்பட்டை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் நகக் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் தீபக்கிற்கு வால்பாறை அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை தாக்கி காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 10 ஆயிரம் உடனடி நிவாரண தொகையாக வனத்துறையினர் வழங்கினர்.