போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே. நகரில் 6 சவரன் நகைக்காக ஆதாயக்கொலை நடந்தது. பவானி சப் டிவிஷன் மற்றும் சித்தோடு போலீசார் சம்பவம் நடந்து 10 மணி நேரத்தில் குற்றவாளி நிக்கோலஸ் தன்ராஜ் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வெகுவாக பாராட்டினார்..