ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தியை அனுமதிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்கள் வ.உ.சிதம்பரனார்,
பாரதியார், மருது சகோதரர்கள்
மற்றும் வேலு நாச்சியார் ஆகியோரின்
பங்களிப்பை விளக்கும் அலங்கார ஊர்தியை
நிராகரித்த ஒன்றிய அரசைக் கண்டித்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.