நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜூ. இவர் அப்பகுதியில் ஒருவரது உள்ள வீட்டில் நள்ளிரவில் புகுந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 16 வயதான சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சிறுமி கூச்சலிட, சத்தம் கேட்டு அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் எழுந்து பார்த்துள்ளனர். உடனே விஜூ அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் விஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர், வீரமணி.
குற்றாலம்.