தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் சரண்
ஐடி அதிகாரிகள் போல் நடித்து ரெய்டு நடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்.
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம். கல்குவாரி உரிமையாளரான இவரது வீட்டிற்கு கும்பலாக வந்த நபர்கள், ஐ.டி. அதிகாரிகள் என்று கூறி ரூ 15 லட்சத்தை பறித்துச் சென்றனர். இதுதொடர்பான வழக்கில் பிரவீன் குமார், மணிகண்டன், மோகன்குமார்,
சதீஸ், ராமசாமி, ஆனந்த், தியாகராஜன் ஆகிய ஏழு பேரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மேத்யூ, மகேஸ்வரன், பைசல் ஆகிய மூவரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கோவையைச் சேர்ந்த மேத்யூ பொள்ளாச்சி ஜே.எம் எண் 2 கோர்ட்டில் தாமாக முன்வந்து சரணடைந்தார்.