குடியரசு தின விழா கொண்டாட்டம்
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாக்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட. இடங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தேசியக்கொடியை ஏற்றினார். தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அலுவலகங்கள், தீயணைப்பு நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், கிழக்கு, மேற்கு, தாலுகா, வடக்கிபாளையம் காவல் நிலையங்கள், அரசு கலைக்கல்லூரி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஆனைமலை தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கோட்டூர், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி மற்றும் ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகங்கள், வனத்துறை அலுவலகம், ஆகியவற்றில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.