குடிநீர் பிரச்சனைக்கு ஆழ்குழாய் மூலம் தீர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வேல்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீர் சரிவர கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண கல்லாபுரம் ஊராட்சி நிர்வாகம் அதிரடியாக களம் இறங்கியது. ஊராட்சியின் பொது நிதியில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் துவங்கப்பட்டன.
பணிகள் முடிவடைந்த நிலையில் வேல்நகர் பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் ஷேக்பரித் முன்னிலை வகித்தார்.
செய்தியாளர், கண்ணன்.
உடுமலை.