திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு பரிசு
திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக நகர் வடக்கு காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் அதிக வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது, குற்றவாளிகளை இரவு நேரத்தில் காவலில் வைக்காமல் உடனடியாக கோர்ட்டில் ஆஜர் செய்தல், திருட்டுக்கள் நடக்காமல் தடுத்தல் உட்பட பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மகேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார். பின்பு இனிப்பு வழங்கி, மரக்கன்றுகள் நட்டு வைத்த அவர் கூறியதாவது: நமது கடமைகளை செம்மையாக செய்தாலே பரிசுகள் நம்மைத் தேடி வரும் என்பதற்கு உதாரணம்தான் நகர் வடக்கு காவல் நிலையம் பரிசு பெற்றிருப்பது. மேலும் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிலும் இதுமாதிரி சிறப்பு பரிசுகளை பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, என்றார்.
செய்தியாளர் ரியாஸ், திண்டுக்கல்.