உள்ளாட்சித் தேர்தல் – அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது.
வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தபின் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடந்தது.
இதில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வாக்குப் பதிவுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பயிற்சிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.