வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம்: அடிதடி
நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்வதில் கட்சிகார்களுக்கு இடையே பல பிரச்சனைகள் மேலோங்கி உள்ளதாக கூறபடுகிறது.
நேற்று நடந்த கலந்தாய்வின் போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோர் தங்களது கட்சிக்கார்களாலேயே தாக்குதலுக்கு உள்ளானார்கள் என கூறபடுகிறது.
சமீபத்தில் அ.தி.மு.க. வில் இருந்து விலகி தி.மு.க. விற்கு வந்த குற்றாலம் குமார் பாண்டியனின் அ.தி.மு.க. பாசம் கொண்ட விசுவாசிகளுக்கே அதிக அளவில் வார்டுகளை தென்காசி தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர் அப்பகுதி பரம்பரை தி.மு.க. வினர். உடனடியாக தலைமை மறு பரிசீலனை செய்யாவிட்டால் தி.மு.க. வுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாது, அதற்கான உள்ளடி வேலைகளை துவங்கிவிட்டதாகவும் விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தலைமைக்கு எட்டுமா
என ஏங்கி காத்து இருக்கின்றனர் தி.மு.க.வினர்.